செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மானி மைந்தர்களின் இன்னோர் சாதனை : தேசிய ரீதியில் இரண்டாம் இடம்


இலங்கைப் பாடசாலைகளிற்கிடையிலான 2012ம் ஆண்டுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டித் தொடர் இடம்பெற்று வருகின்றது. பெரு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக உதைபந்தாட்டத்தில் சாதித்து வரும் மானிப்பாய் இந்து இவ் வருடமும் உதைபந்தாட்டத்தில் சாதித்தது.
கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணத்தில் சாதித்து தேசிய மட்டத்திற்கு முன்னேறிய இவ் 19 வயதிற்குட்பட்ட அணி தேசிய மட்டத்தில் 2ம் இடத்தினை தட்டிக் கொண்டது.
2012ம் ஆண்டுக்கான தேசிய மட்ட போட்டிகளின் முதலாவது சுற்றின் முதலாவது போட்டியில் அனுராதபுர மத்திய கல்லூரியினை எதிர்கொண்ட மானிப்பாய் இந்து 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் சென்.மேரிஸ் கல்லூரியை எதிர் கொண்டது மானிப்பாய் இந்து அப் போட்டியிலும் 2-0 என்னும் அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றது.
மிக விறுவிறுப்பான காலிறுதி ஆட்டத்தில் கிண்ணியா முஸ்லிம் கல்லூரியினை 3-0 என்னும் கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கான சந்தர்ப்பத்தினை மேலும் உறுதிப் படுத்தியது.
அரையிறுதிப் போட்டியில் யாழ் மாவட்டத்தினைச் சேர்ந்த சென்,பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்கொண்ட மானிப்பாய் இந்து 5-1 என்னும் கோல் கணக்கில் மிக இலகுவான வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
மிக எதிர்பார்க்கப் பட்டதும் முக்கியதுமான இறுதிப் போட்டியில் மன்னார் சென்.சேவியர் கல்லூரியை எதிர்கொண்டது மானிப்பாய் இந்துக் கல்லூரி. இறுதிவரை போரடியும் கோல் எதனையும் பெற முடியாது 0-4 என்னும் கோல் அடிப்படையில் மன்னார் சென்.சேவியர் கல்லூரயிடம் போட்டியினை இழந்து தேசிய மட்டத்தின் இரண்டாம் இடத்தினை தட்ட்ச் சென்றது.
இறுதி போட்டியினைத் தவிர அனைத்துப் போட்டிகளிலும் மானிப்பாய் இந்து வென்றுள்ளமை முக்கிய அம்சமாகும்.

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More