புதன், 6 மார்ச், 2013

மானிப்பாய் இந்துக்கல்லுாரி VS கொழும்பு இந்துக்கல்லுாரி

மானிப்பாய் இந்துக்கல்லுாரி    VS  கொழும்பு  இந்துக்கல்லுாரி  

அணிகளுக்கான மாபெரும் துடுப்பாட்ட போட்டி  வெள்ளிக்கிழமை (08.03.2013) அன்று மானிப்பாய் இந்துக்கல்லுாரி மைதானத்தில் காலை 10.00 மணியலவில் இடம்பெறவுள்ளது 

சனி, 12 ஜனவரி, 2013

யா/மானிப்பாய் இந்துக் கல்லுாரியின் பழைய மாணவர் சங்கத்தால் நடாத்தப்படவுள்ள உதைபந்தாட்ட சுற்றுப்பேட்டி



யாஃமானிப்பாய் இந்துக் கல்லுாரியின் பழைய மாணவர் சங்கத்தால் நடாத்தப்படவுள்ள உதைபந்தாட்ட சுற்றுப்பேட்டி நாளைய தினம் மானிப்பாய் இந்துக் கல்லுாரி மைதானத்தில்1.00 மணியலவில் இடம்பெறவுள்ளது .பாடசாலை வரலாற்றில் முதல்முறையாக நடாத்தப்படும் இச்சுற்றுப்பேட்டி இனி ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இறுதிப்போட்டிகள் பெங்கல் தினத்தை முன்னிட்டு பெங்கல் தினத்தன்று இடம்பெறும்

மானிப்பாய் இந்துக்கல்லுாரி
எதிர்
ஸ்கந்தவரோதயா கல்லுாரி

யாழ்ப்பாண கல்லுரி
எதிர்
யூனியன் கல்லுாரி

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

'December 21st'

SONG   மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் தயாரித்து இசையமைத்த 'December 21st' என்னும் பகுத்தறிவின்பால் சிந்திக்கத் தூண்டும் பாடலை இணையவழி தவளவிட்டிருக்கிறார்கள்...மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வீண்வதந்திகளை களையும் நல்நோக்கத்தில் செயற்பட்டிருக்கும் நம் கல்லூரியின் பழைய மாணவர்களை பாராட்டுவதில் நாமும் பெருமை கொள்வோம்..உங்கள் வாழ்த்துக்களை நீங்களும் அவர்களுக்கு தெரிவியுங்கள்.!!   

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மானி மைந்தர்களின் இன்னோர் சாதனை : தேசிய ரீதியில் இரண்டாம் இடம்


இலங்கைப் பாடசாலைகளிற்கிடையிலான 2012ம் ஆண்டுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டித் தொடர் இடம்பெற்று வருகின்றது. பெரு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக உதைபந்தாட்டத்தில் சாதித்து வரும் மானிப்பாய் இந்து இவ் வருடமும் உதைபந்தாட்டத்தில் சாதித்தது.
கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணத்தில் சாதித்து தேசிய மட்டத்திற்கு முன்னேறிய இவ் 19 வயதிற்குட்பட்ட அணி தேசிய மட்டத்தில் 2ம் இடத்தினை தட்டிக் கொண்டது.
2012ம் ஆண்டுக்கான தேசிய மட்ட போட்டிகளின் முதலாவது சுற்றின் முதலாவது போட்டியில் அனுராதபுர மத்திய கல்லூரியினை எதிர்கொண்ட மானிப்பாய் இந்து 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் சென்.மேரிஸ் கல்லூரியை எதிர் கொண்டது மானிப்பாய் இந்து அப் போட்டியிலும் 2-0 என்னும் அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றது.
மிக விறுவிறுப்பான காலிறுதி ஆட்டத்தில் கிண்ணியா முஸ்லிம் கல்லூரியினை 3-0 என்னும் கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கான சந்தர்ப்பத்தினை மேலும் உறுதிப் படுத்தியது.
அரையிறுதிப் போட்டியில் யாழ் மாவட்டத்தினைச் சேர்ந்த சென்,பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்கொண்ட மானிப்பாய் இந்து 5-1 என்னும் கோல் கணக்கில் மிக இலகுவான வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
மிக எதிர்பார்க்கப் பட்டதும் முக்கியதுமான இறுதிப் போட்டியில் மன்னார் சென்.சேவியர் கல்லூரியை எதிர்கொண்டது மானிப்பாய் இந்துக் கல்லூரி. இறுதிவரை போரடியும் கோல் எதனையும் பெற முடியாது 0-4 என்னும் கோல் அடிப்படையில் மன்னார் சென்.சேவியர் கல்லூரயிடம் போட்டியினை இழந்து தேசிய மட்டத்தின் இரண்டாம் இடத்தினை தட்ட்ச் சென்றது.
இறுதி போட்டியினைத் தவிர அனைத்துப் போட்டிகளிலும் மானிப்பாய் இந்து வென்றுள்ளமை முக்கிய அம்சமாகும்.

சனி, 28 ஜூலை, 2012

மானிப்பாய் இந்துக்கல்லூரியில் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் முத்தமிழ் விழாவும்


மானிப்பாய் இந்துக்கல்லூரியில் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் முத்தமிழ் விழாவும் கல்லூரி முதல்வர் எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பிரதம விருந்தினராகவும், பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் ஓய்வு பெற்ற அதிபர் சோ.பத்மநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளான தனி நடிப்பு, குழு இசை, தாள லயம், பேச்சு, பட்டிமன்றம், நாடகம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.



செவ்வாய், 24 ஜூலை, 2012

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் முத்தமிழ் விழா எழுச்சியாய் கொண்டாடப்பட்டது




மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்லூரி முதல்வர் எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற சுவாமி விபுலாநந்தர் நினைவு தினமும் முத்தமிழ் விழாவும் 19.07.2012 அன்று வாகீசர் மண்டபத்தில் மிகச்சிறப்பாக  கொண்டாடப்பட்டது 

ஞாயிறு, 8 ஜூலை, 2012

மானிப்பாய் இந்துக்கல்லுாரியினுடைய வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தின விழாவும்

மானிப்பாய் இந்துக்கல்லுாரியினுடைய வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தின விழாவும்  04.07.2012  அன்று மாலை 5.30 மணியலவில் கல்லுாரியின் திறந்த வெளிஅரங்கில் மிக சிறப்பாக இடம்பெற்றது
இதில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நீதி பதி கலந்துசியப்பித்தார்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More